இந்துகள் ஓட்டுக்கள் டார்கெட்...முருகனை கையில் எடுத்ததற்கு இதுதான் காரணமா?

முருகனை மையமாகக் கொண்ட அரசியல் ஏற்கனவே தமிழகத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில், தனுஷின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Jul 28, 2026 - 18:02
0 236
இந்துகள் ஓட்டுக்கள் டார்கெட்...முருகனை கையில் எடுத்ததற்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் "தமிழ் முருகன்" திரைப்படம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முருகப்பெருமான் பெரும்பாலான இந்துக்களால் வழிபடப்படும் தெய்வமாக இருப்பதால், அவரை மையப்படுத்திய அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாள அரசியல் அண்மைக் காலமாக அதிகம் பேசப்படுகிறது.ஏனென்றால் முருகப்பெருமான் தமிழ்க்கடவுளாக பெரும்பாலனோர் மத்தியில் அதிகமாக வழிப்படக்கூடிய தெய்வமாக இருந்து வருவதால் தான் இந்துக்களின் ஓட்டுக்களையும் பெற்றுவிடலாம் என்ற நோக்கிலும் அரசியல் கட்சிகள் முருகப்பெருமானை கையில் எடுப்பதற்கு முக்கிய கருதுபொருளாக மாறியுள்ளது.

இதற்கு முன்னதாக பாஜக, வேல் யாத்திரை மற்றும் முருக பக்தர்கள் மாநாடு மூலம் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க முயன்றது. அதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் முருகனை தமிழர்களின் அடையாளமாக முன்வைத்து தொடர்ந்து கூட்டங்களில் பேசி வருகின்றார். திமுக மட்டும் பகுத்தறிவு கொள்கை கொண்டதாகக் கூறப்பட்டாலும் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதவாறு தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை அளிப்பது  போன்ற இந்துக்களின் பிடித்த கடவுளாக இருக்கக்கூடிய முருகளை கையில் எடுப்பது தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு "தமிழ் முருகன்" என்று பெயரிடப்பட்டிருப்பதும், முன்னோட்டக் காட்சியில் வேல் ஏந்தி யானை மீது அமர்ந்திருக்கும் கதாபாத்திரமாக அவர் தோன்றியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. "தமிழ் மக்களுக்கும், நிலத்திற்கும் பாதுகாவலன்" என்ற வாசகத்துடன் வெளியான இந்த டீசர் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இதற்கிடையில், இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் முருகன் தொடர்பான திரைப்படம் குறித்தும் தமிழ்நாட்டில் விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தனுஷ் அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படும் சூழலில், "தமிழ் முருகன்" திரைப்படம் அரசியல் ரீதியான சின்னமாக அமையுமா, அல்லது இது முற்றிலும் கலைப்படைப்பா என்ற கேள்வி அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், தனுஷ் அரசியலுக்கு வருகிறார் அல்லது இந்தப் படம் தேர்தல் அரசியலுடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User