சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்… ஜூலை 31ல் இருந்து சிக்கனே கிடைக்காது..!

கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாதை கண்டித்து வரும் ஜூலை 31 தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலவரையற்ற வேலை நிறுத்ததை தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 

Jul 27, 2026 - 16:00
0 252
சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்… ஜூலை 31ல் இருந்து சிக்கனே கிடைக்காது..!

தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கறி கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி, நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும். கறி கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை, கோழி உற்பத்தியாளர்கள் கடை பிடிக்க வேண்டும். இதனால் கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதால், அந்த கோழிகள் எடை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கோழிகளில் உடலில் தீவனங்கள் தங்கி ஜூரனம் ஆவதில்லை. இதனால் அதன் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இறைச்சியின் தன்மை பாதிக்கிறது. இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 31ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User