அம்மோனியா வாயு கசிவு: சிகிச்சை முடிந்த 62 தொழிலாளர்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 62 தொழிலாளர்கள் அவருடைய சொந்த மாநிலத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Jun 26, 2026 - 12:21
0 223
அம்மோனியா வாயு கசிவு: சிகிச்சை முடிந்த 62 தொழிலாளர்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில்  அம்மோனியா வாயு கசிவு  விபத்தால் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை,  ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 62 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பூரண குணமடைந்த 62 தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தமிழக அரசு மூலமாக இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புவனேஸ்வர் விரைவு ரயிலில் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்த மாநிலமான ஒடிசா மாநிலத்திற்கு புறப்பட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User