Yuvan Shankar Raja: புதுவை சிறுமி விவகாரம்… யுவன் சங்கர் ராஜா வேதனை

புதுவை சிறுமி விவகாரத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

Mar 08, 2024 - 16:30
0 787
Yuvan Shankar Raja: புதுவை சிறுமி விவகாரம்… யுவன் சங்கர் ராஜா வேதனை

புதுவை சிறுமி சம்பவம் குறித்து யுவன் சங்கர் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை காரணமாக 9வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.  

அதில், இந்தியாவில் 28.9 சதவீதம் குழந்தைகள் ஏதோ ஒருவகையில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். Good Touch, Bad Touch ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருட்களால் இப்படியொரு கொடூரமான சம்பவம் நடந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாதுகாப்பான சமுதாயம் கொண்ட நாடாக உருவாக நாம் ஒன்றுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.  

முன்னதாக 2021ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘Don’t Touch Me’ என்ற ஆல்பம் வெளியிட்டு இருந்தார் யுவன். இந்தப் பாடலை யுவனுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியிருந்தார்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User