Vijay: தெய்வீக அதிர்வில் ராகவா லாரன்ஸ்… விஜய் அம்மாவுடன் சாய் பாபா கோயிலில் தரிசனம்!

விஜய் தனது அம்மாவுக்காக கட்டிக் கொடுத்த சாய் பாபா கோயிலில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Apr 13, 2024 - 23:09
0 326
Vijay: தெய்வீக அதிர்வில் ராகவா லாரன்ஸ்… விஜய் அம்மாவுடன் சாய் பாபா கோயிலில் தரிசனம்!

சென்னை: விஜய் தற்போது கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5ம் தேதி என படக்குழு அறிவித்துவிட்ட நிலையில், நாளை ஃபர்ஸ் சிங்கிள் வெளியாகிறது. அடுத்தடுத்து வெளியான கோட் அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் செம்ம வைப்பில் உள்ளனர். இன்னொரு பக்கம் விஜய்யால் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தெய்வீக அதிர்வில் இருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  

அதாவது சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியில் விஜய் தனது அம்மாவுக்காக சாய் பாபா கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் பிப்ரவரி மாதம்  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது விஜய் அந்த சாய் பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் விஜய்யுடன் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இன்று காலை விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகருடன் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான லாரன்ஸ் சாமி தரிசனம் செய்ததார்.  

ராகாவா லாரன்ஸ், ஷோபா சந்திரசேகர் இருவரும் கோயிலில் ஒன்றாக சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரலாகின. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், நண்பன் விஜய் புதிதாக கட்டியுள்ள சாய் பாபா கோயிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன். நான் ராகவேந்திரர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் போது விஜய் அம்மா ஷோபா அங்கு வந்ததோடு பாடல் பாடி வாழ்த்தினார். இன்று நான் இந்த கோயிலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பன் விஜய்க்கு எனது மனபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  

கோயிலுக்குள் சென்றவுடன் தூய தெய்வீகமான அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். அனைவரும் இந்த கோயிலுக்கு சென்று சாய் பாபாவை தரிசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த டிவிட்டர் பதிவையும் அவர் ஷேர் செய்துள்ள புகைப்படங்களையும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User