Vijay Sethupathi: ஒரே நேரத்தில் விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுனுடன் கூட்டணி… விஸ்வரூபம் எடுக்கும் அட்லீ!

ஜவானை தொடர்ந்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்கவுள்ளார் அட்லீ. அதேநேரம் விஜய் சேதுபதியுடனும் அட்லீ கூட்டணி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Apr 03, 2024 - 22:55
0 564
Vijay Sethupathi: ஒரே நேரத்தில் விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுனுடன் கூட்டணி… விஸ்வரூபம் எடுக்கும் அட்லீ!

சென்னை: அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. பான் இந்தியா படமாக வெளியான ஜவான் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஆனால், ஜவான் வெற்றிக்குப் பின்னர் நிகழ்ச்சியொன்றில் பேசிய விஜய் சேதுபதி, இனி வில்லனாக நடிக்கப் போவதில்லை எனக் கூறியிருந்தார். மேலும், வில்லன் கேரக்டருக்காக ரிஸ்க் எடுத்து நடித்தாலும் சில காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கப்படுகின்றன. இதற்கு ஹீரோக்களின் அழுத்தம் தான் காரணம் என யாரையும் குறிப்பிடாமல் பேசினார்.  

ஜவான் படத்தை மனதில் வைத்து தான் விஜய் சேதுபதி இவ்வாறு பேசியதாகவும், அவரை பாலிவுட் கூட்டிச் சென்று அட்லீ ஏமாற்றிவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு அட்லீ தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளாராம் அட்லீ. ஏற்கனவே அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி முடிவாகிவிட்டது. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் சேதுபதியா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.  

ஆனால், அதற்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தெறி இந்தி ரீமேக்கை தயாரித்து வரும் அட்லீ, அடுத்து தமிழில் விஜய் சேதுபதியை தனது பேனரில் நடிக்க வைக்க பிளான் செய்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் இயக்குநராக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பாலாஜி தரணிதரன் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது மகாராஜா உட்பட 3க்கும் மேற்பட்ட படங்களுக்காக கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படங்கள் முடிந்த பின்னர் அட்லீ தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User