அடங்காத இஸ்ரேல், லெபனான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ரத்து 

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பதால், அமெரிக்கா ஈரான் இடையே நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

Jun 19, 2026 - 17:35
0 541
அடங்காத இஸ்ரேல், லெபனான் மீது மீண்டும்  தாக்குதல்: அமெரிக்கா ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ரத்து 
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

தெற்கு லெபனானின் நபாத்தியா மாவட்டத்தின் பல நகரங்கள் மீது நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இந்த தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தி உள்ளது. வான்வழித் தாக்குதலோடு பீரங்கித் தாக்குதல்களும் நடந்ததாக லெபனான் ஊடகங்களும், அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் ஹிஸ்புல்லா படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானின் பல பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் அவர்களின் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா படை மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்குத் தங்களின் பிரதிநிதிக் குழுவை அனுப்புவதற்கு ஈரான் அரசு தாமதித்து வருவதால்தான் இன்று நடைபெற வேண்டிய நிகழ்வு தள்ளிப்போனதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User