Thangalaan VS Raayan: விக்ரமின் தங்கலானுடன் மோதும் தனுஷின் ராயன்… சபாஷ் சரியான போட்டி!

சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், தனுஷின் ராயன் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

May 07, 2024 - 16:45
0 352
Thangalaan VS Raayan: விக்ரமின் தங்கலானுடன் மோதும் தனுஷின் ராயன்… சபாஷ் சரியான போட்டி!

சென்னை: இந்தண்டு பொங்கல் தினத்தில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாகின. ஆனால், இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து ரிலீஸான ரஜினியின் லால் சலாம் திரைப்படமும் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் ரிலீஸான சுந்தர் சியின் அரண்மனை 4 எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அதேநேரம் தேர்தல், ஐபில் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் இந்த சம்மரில் ரிலீஸாகவில்லை. ஜூன் மாதத்திலிருந்து கோலிவுட்டிற்கு நல்ல காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 13ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. தனுஷ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள ராயன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

வடசென்னையை பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன் படத்துக்கு தாறுமாறான ஹைப்  காணப்படுகிறது. அதேநேரம் ஜூன் மாதம் வெளியாகவிருந்த கமலின் இந்தியன் 2 ஜூலை ரிலீஸுக்கு தள்ளிப் போய்விட்டதாகத் தெரிகிறது. இதனால் சீயான் விக்ரமின் தங்கலான் படத்தை ஜூன் 13ல் களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் சீயான் விக்ரம் கேரியரில் தரமான மூவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

ராயன், தங்கலான் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகவிருப்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத ட்ரீட். அதேபோல் இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 9ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் தங்கலான் ரிலீஸ் தேதியும் விரைவில் அபிஸியலாக அறிவிக்கப்படவுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User