Thalaivar 171: ரஜினியின் தலைவர் 171 டீம் ரெடி… மோகன் சீன்லயே கிடையாது… மொத்த லிஸ்ட் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தில் மோகன் வில்லனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தலைவர் 171 பட்டியலில் மோகன் பெயர் இடம்பெறவில்லை.

Apr 10, 2024 - 17:58
0 471
Thalaivar 171: ரஜினியின் தலைவர் 171 டீம் ரெடி… மோகன் சீன்லயே கிடையாது… மொத்த லிஸ்ட் இதோ!

சென்னை: தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த டீசர் செம்ம மிரட்டலாக இருக்கும் என அனிமல் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த டீசருக்காக தலைவரின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளோடு வெயிட்டிங்கில் உள்ளனர். இந்தப் படத்தின் கதை பற்றி இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இது லோகேஷின் LCU ஜானர் இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ்ஜே ஓபனாக தெரிவித்துவிட்டார்.  

இதனையடுத்து தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதன்படி இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் வில்லனாகவும், ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ஷாருக்கான் நடிக்கவில்லை என்றும், ரன்வீர் சிங் மட்டுமே கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், ராகவா லாரன்ஸ் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.  

தலைவர் 171 படத்தில் வில்லன் கேரக்டரில் மைக் மோகன் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இப்போது அதுவும் வதந்தி தான் என்றும், விஜய் சேதுபதி, சாண்டி மாஸ்டர் இருவரும் தான் வில்லன் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர ரஜினி ஜோடியாக ஷோபனாவும், இன்னும் சில முக்கியமான கேரக்டர்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

லோகேஷ் கனகராஜ்ஜின் டீமில் தவிர்க்க முடியாத பிரபலங்களான அனிருத், அன்பறிவ் மாஸ்டர், ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் ஆகியோர் தலைவர் 171ல் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 1
Love Love 1
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User