முதியவரை துரத்தித் துரத்திக் கடித்த தெருநாய்-சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

நாய்களை பிடிக்கும் பணியில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Feb 09, 2024 - 14:40
Updated: 3 years ago
0 136
முதியவரை துரத்தித் துரத்திக் கடித்த தெருநாய்-சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளம் சாலையில் முதியவரை தெரு நாய் கடித்துக் குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கீழபாறையடி  2-ம் தெருவை சேர்ந்த ஒரு முதியவர் தெப்பக்குளம் அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த நாய் அவரைப் பார்த்தவுடன் பாய்ந்து கடிக்கவே, தப்பிக்க பலமுறை முயற்சித்தும் முதியவரால் முடியவில்லை. இதனை பார்த்த இளைஞர் ஒருவர் நாயை விரட்டி முதியவரை மீட்டார்.

தென்காசி நகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் தொந்தரவுகள் உள்ளது என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதியவரை நாய் கடித்துக் குதறிய வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் சாலையில் சுதந்திரமாக சுற்றிவர, நாய்களைப் பிடிக்கும் பணியில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User