Shankar: ஷங்கர் வீட்டு திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ரன்வீர் சிங், அட்லீ… கம்பெனி கொடுத்த அதிதி!

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் அட்லீ, ரன்வீர் சிங் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Apr 16, 2024 - 20:46
0 312
Shankar: ஷங்கர் வீட்டு திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ரன்வீர் சிங், அட்லீ… கம்பெனி கொடுத்த அதிதி!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவரை திருமணம் செய்திருந்த ஐஸ்வர்யா, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கும் ஷங்கரிடம் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்த்து வரும் தருண் கார்த்திகேயனுக்கும் நிச்சயம் நடந்தது. இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களில் பிசியாக இருக்கும் ஷங்கர், இன்னொரு பக்கம் தனது மகளின் திருமண ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.  

அதன்படி நேற்று சென்னையில் நடந்த ஐஸ்வர்யா ஷங்கர், தருண் கார்த்திகேயன் திருமணத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா – தருண் ஆகியோரின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.  

இதில், ஏஆர் ரஹ்மான், வைரமுத்து, அனிருத், சிரஞ்சீவி, ராம் சரண், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன், பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து அட்லீ, அதிதி சங்கர், அவரது தம்பி ஆகியோர் குத்தாட்டம் போட்டு வைப் கொடுத்துள்ளனர். விஜய்யின் கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படிப் போடு போடு பாடலுக்கு, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கும் செம்மையாக ஆட்டம் போட்டனர்.  

ரன்வீர் சிங், அட்லீ, அதிதி ஷங்கர் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகளின் இரண்டாவது திருமணம் என்றாலும் இயக்குநர் ஷங்கர் ஆட்டம் பாட்டம் என பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User