ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கள் ஜூன் மாதம் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடல் அடுத்த மாதம் ஜூன் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

May 09, 2026 - 12:56
0 482
ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கள் ஜூன் மாதம் வெளியீடு
முதல் சிங்கள் ஜூன் மாதம் வெளியீடு

ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு ஏப்ரல் 21ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. . ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி போன்றோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தெரிகிறது. 

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக நடைபெற்று வருகிறது.  ஆகஸ்ட்  மாதம் படத்தை வெளியீடு தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்த போது, அதை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். இந்த நிலையில்  ஜூன் மாதம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது என சொல்லப்படுகிறது. 

இதுதான் இப்போதைய ஜெயிலர் 2 அப்டேட். ஜெயிலர் முதல் பாகத்திலிருந்து முதல் சிங்கிளாக வெளியான `காவாலா' மிகப்பெரிய ஹிட். கிட்டத்தட்ட அந்தப் படத்துக்கான முகவரியாகவே மாறியது. அது போல இந்தப் பாடலும் பெரிய ஹிட்டை கொடுக்கும் என படதயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User