Maharaja Trailer: கம்பேக் கொடுக்க ரெடியான விஜய் சேதுபதி... வெளியானது மகாராஜா ட்ரெய்லர்!

விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

May 30, 2024 - 23:50
0 279
Maharaja Trailer: கம்பேக் கொடுக்க ரெடியான விஜய் சேதுபதி... வெளியானது மகாராஜா ட்ரெய்லர்!

சென்னை: கோலிவுட்டின் வெரைட்டியான நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், கேமியோ என கிடைக்கும் எந்த கேரக்டர்களாக இருந்தாலும் தனது நடிப்பில் ஸ்கோர் செய்துவிடுவார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு செம்மையான மார்க்கெட் உள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு தரமான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறார். ஆனால், காணாமல் போன லட்சுமி நபரா அல்லது ஏதேனும் பொருளா..? என தெரியாமல் போலீஸார் திணறுவதாக வெளியாகியுள்ளது மகாராஜா படத்தின் ட்ரெய்லர். இதன் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் தெறிக்க பல சஸ்பென்ஸ்களுடன் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். இவரது முதல் படமான குரங்கு பொம்மை விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் விஜய் சேதுபதி கூட்டணியில் நித்திலன் சாமிநாதன் இணைந்தது முதல் மகாராஜா படத்துக்கு எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விஜய் சேதுபதியுடன் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளதும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. தற்போது வெளியான மகாராஜா படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், விஜய் சேதுபதிக்கு தரமான கம்பேக் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த ட்ரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி விரைவில் என படக்குழு சஸ்பென்ஸ் வைத்துள்ளது. ஜூன் 13ம் தேதி தனுஷின் ராயன் திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய தகவல்படி ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதனால் ராயனுக்குப் பதிலாக ஜூன் 13ம் தேதி விஜய் சேதுபதியின் மகாராஜா ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் ராயன் ரிலீஸ் தேதி மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மகாராஜா ட்ரைலரில் ரிலீஸ் தேதி விரைவில் என படக்குழு சஸ்பென்ஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User