Kanguva: மிரட்டுமா கங்குவா டீசர்..? திடீர்ன்னு வந்த அப்டேட்… எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mar 18, 2024 - 16:46
0 201
Kanguva: மிரட்டுமா கங்குவா டீசர்..? திடீர்ன்னு வந்த அப்டேட்… எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வரும் கங்குவா ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள கங்குவாவை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் கங்குவா மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். 3-டி தொழில்நுட்பத்தில் ரொம்பவே தரமாக உருவாகி வருகிறது கங்குவா. இதனால் இந்தப் படம் படு மிரட்டலான விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் முடியாததாலும் அடுத்த மாதம் தேர்தல் வரவிருப்பதாலும் ரிலீஸ் தள்ளிப் போகலாம்.

இந்நிலையில் கங்குவா டீசர் நாளை (மார்ச் 19) மாலை 4.30 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திடீரென டீசர் அப்டேட் வெளியாகியுள்ளதால், இதனுடன் கங்குவா ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User