Jailer 2: டைட்டிலுடன் ரெடியான ஜெயிலர் 2 அப்டேட்… நெல்சனுக்கு சிக்னல் கொடுத்த ரஜினி!

ரஜினி – நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டம் பாகம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Apr 13, 2024 - 16:17
0 298
Jailer 2: டைட்டிலுடன் ரெடியான ஜெயிலர் 2 அப்டேட்… நெல்சனுக்கு சிக்னல் கொடுத்த ரஜினி!

சென்னை: கடந்தாண்டு ரிலீஸான ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த படமாக அமைந்தது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, கேமியோ ரோலில் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக வெளியான ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது.     

ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் சொகுசு கார் அன்பளிப்பாக கொடுத்து மாஸ் காட்டினார் கலாநிதிமாறன். இதனால் ஜெயிலர் 2ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், வேட்டையன், தலைவர் 171 என ரஜினியின் லைன் அப்பில் வரிசையாக இரண்டு படங்கள் இருப்பதால் ரசிகர்களும் குழப்பத்தில் இருந்தனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் ஜெயிலர் 2ம் பாகத்துக்கான ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வருவதில் நெல்சன் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.  

இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தின் டைட்டிலையும் நெல்சன் முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் 2ம் பாகத்தின் கதையை ரஜினியிடம் கூறி அவரிடம் சம்மதம் வாங்கிவிட்டார் நெல்சன். இதனால் விரைவில் ஜெயிலர் 2ம் பாகம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இப்படத்திற்கு ‘ஹுக்கும்’ என டைட்டில் முடிவு செய்துள்ளாராம் நெல்சன். இதற்கும் சூப்பர் ஸ்டார் தரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஹீரோ ஒருவர் கமிட்டாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயிலர் 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2025 தொடக்கத்திலோ ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்டையன் முடிந்ததும் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User