நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தங்கம் விலை ரூ.1440 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

May 05, 2026 - 10:01
0 396
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தங்கம் விலை ரூ.1440 குறைவு 
தங்கம் விலை ரூ.1440 குறைவு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1440 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்து கொண்டு இருப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User