Good Bad Ugly: இப்படித்தான் போன வருசம் விடாமுயற்சி… இப்போ Good Bad Ugly..? ஆடிப் போன அஜித் ரசிகர்கள்

அஜித்தின் 63வது படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இதுபற்றிய அப்டேட்டை டைட்டிலுடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Mar 15, 2024 - 21:54
0 293
Good Bad Ugly: இப்படித்தான் போன வருசம் விடாமுயற்சி… இப்போ Good Bad Ugly..? ஆடிப் போன அஜித் ரசிகர்கள்

துணிவு படத்தோட ஹிட்டுக்கு அப்புறம் அடுத்து விஸ்வரூப வெற்றி கொடுக்கணும்ன்னு அஜித் நினைச்சாரோ என்னவோ. தன்னோட ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி-ன்னு டைட்டில் வச்சு, வேற லெவல்ல சர்ப்ரைஸ் கொடுத்தார். இதனால வைப் ஆன அஜித் ரசிகர்கள் படத்தோட ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், ரிலீஸ் தேதி வரை விடாமுயற்சி அப்டேட்ஸ்ஸ கொண்டாடித் தீர்க்கணும்னு முடிவு பண்ணி காத்துட்டு இருக்காங்க.  

ஆனா போன வருசம் விடாமுயற்சி டைட்டில் வெளியானதோட சரி, அதுக்கப்புறமா மருந்துக்கும் கூட ஒரு அப்டேட்டும் வெளியாகல. அஜித் ரசிகர்கள்ல தூக்கத்துல எழுப்பிக் கேட்டா கூட விடாமுயற்சி அப்டேட் எப்பதான்யா வரும்ன்னு தேஞ்சுப் போன ரெக்கார்டு மாதிரி அதையே கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கெல்லாம் ஆறுதலா சோப்பு டப்பா மாதிரி அப்பபோ ரசிகர்கள் கூட மட்டும் செல்ஃபி எடுத்து சமாளிச்சிட்டு வந்தர் அஜித். 

இந்த நிலையில் தான் ரசிகர்கள்லாம் விடாமுயற்சி அப்டேட்டுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்க, அஜித்தோ ஏகே 63 டைட்டிலையே ரிலீஸ் பண்ணி ரியல் சம்பவம் பண்ணிருக்கார். ஆதிக் ரவிச்சந்திரன் டடைரக்‌ஷன்ல,, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த மூவிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் பண்றார். ஃபர்ஸ்ட் டைம் இணைந்த இந்த கூட்டணில உருவாகுற மூவிக்கு ‘Good Bad Ugly’-ங்குற டைட்டில் கன்ஃபார்ம் பண்ணதோட, இந்தப் படம் 2025 பொங்கல் ஸ்பெஷலா ரிலீஸாகும்ன்னும் அறிவிச்சிருக்காங்க.  

விடாமுயற்சி அப்டேட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த ரசிகர்களுக்கு, ஏகே 63 டைட்டில் ரிலீஸாகி சர்ப்ரைஸ் கொடுத்துருக்கு. ஆனாலும் இந்த டைட்டில நினைச்சு அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஆடிப் போய்ட்டாங்கன்னு தான் சொல்லணும். எப்பவும் தமிழ்ல டைட்டில் வைக்குறது தான் அஜித்தோட வழக்கம். சிட்டிசன், Red மட்டுமே இதுவரை English டைட்டில்ல வெளியான அஜித் படங்கள். இப்ப 22 ஆண்டுகளுக்குப் பின்னர் Good Bad Ugly-ன்னு இங்லீஷ் டைட்டிலோட களமிறங்கப் போறார் அஜித். 

கமல் நடிக்கும் தக் லைஃப், விஜய் நடிச்சிட்டு வர்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படங்கள் இங்லீஷ் டைட்டில்ல உருவாகிட்டு வருது. இப்போ இந்த லிஸ்ட்ல அஜித்தும் இணைஞ்சது கொஞ்சம் ஷாக்கிங்கா தான் இருக்குன்னு நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பண்ணிட்டு வர்றாங்க. அதுமட்டும் இருந்தா பரவாயில்ல, குட் பேட் அக்லி-ங்குற டைட்டில பார்த்தா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தோட பார்ட் 2-வா இருக்குமோ-னும் ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க.  

டைட்டிலே ஒரு டிசைன்ல இருக்கு, படம் எப்படி இருக்கப் போகுதோன்னு தெரியலயே-னு அஜித் ரசிகர்கள் அரண்டுப் போய் இருக்காங்களாம். அதேமாதிரி, “இப்படித்தான் போன வருசம் மே மாசம் ஒருத்தன் டைட்டிலை மட்டும் Announce பண்ணிட்டு காணாம போய்ட்டான். நீயும் அதேமாதிரி இருந்திராம அப்பப்போ எங்க கூட பேசிக்க ராஜா..”ன்னு விடாமுயற்சி படத்த வச்சு சைலண்டா மீம் போட்டு கலாய்ச்சி விட்டுருக்காங்க. இதெல்லாத்தையும் தாண்டி குட் பேட் அக்லி சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸாகி சம்பவம் பண்ணுமான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User