தங்கம், வெள்ளி விலை சரிவு: சவரன் ரூ.1,600, வெள்ளி கிலோ ரூ 20 ஆயிரம் குறைவு

சவரன் ரூ.1,600, வெள்ளி கிலோ ரூ 20 ஆயிரம் குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்றே மகிழ்ச்சி தரும் செய்தியாக தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது. 

Feb 13, 2026 - 09:54
0 362
தங்கம், வெள்ளி விலை சரிவு: சவரன் ரூ.1,600, வெள்ளி கிலோ ரூ 20 ஆயிரம் குறைவு
சவரன் ரூ.1,600, வெள்ளி கிலோ ரூ 20 ஆயிரம் குறைவு

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சவரன் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது. 

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,800 குறைந்து விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,200 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14.400 விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த மூன்று தினங்களாக ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3 லட்சம் என்ற நிலையிலேயே மாற்றமின்றி விற்பனை ஆகி வந்தது. இன்றைய தினம் வெள்ளியும் கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000 விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User