GOAT: “சீக்கிரமே GOAT தரமான சம்பவம் இருக்கு..” வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Mar 15, 2024 - 16:47
0 246
GOAT: “சீக்கிரமே GOAT தரமான சம்பவம் இருக்கு..” வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

விஜய் கேரியரில் மிக முக்கியமான படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், வெங்கட் பிரபு, யுவன், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, பிரேம்ஜி உட்பட மேலும் பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். விஜய் இதுவரை நடித்த படங்களில் லியோவுக்குப் பின்னர் பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகி வருகிறது கோட். இதுவே இந்தப் படத்திற்கு மிகப் பெரிய ஹைப் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோட் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஷெட்யூல் கேரளாவில் தொடங்கவுள்ளதாம். அதேபோல், இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷாவும் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். அடுத்தடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவை டேக் செய்து எக்ஸ் தளத்தில் அப்டேட் கேட்டு வருவது வழக்கமாகிவிட்டது.

 

இதனையடுத்து தற்போது அப்டேட் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. ”மிக விரைவில் தரமான கோட் அப்டேட்..” என தனது டிவிட்டர் தளத்தில் போஸ்ட் போட்டுள்ளார் வெங்கட் பிரபு. இதனைப் பார்த்த ரசிகர்கள் GOAT, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் போன்ற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இது கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளா அல்லது படத்தின் ரிலீஸ் தேதியா எனவும் டிவிட்டரில் விவாதம் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User