ஈரான் மீது பொருளாதார தடை: ஐ.நா.வில் தீர்மானம் பரிந்துரை 

அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் கூட்டு ஆதரவில் ஐ.நா. சபையில் தீர்மானம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை அனுமதிக்காவிட்டால் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

May 06, 2026 - 13:21
0 345
ஈரான் மீது பொருளாதார தடை: ஐ.நா.வில் தீர்மானம் பரிந்துரை 
ஈரான் மீது பொருளாதார தடை

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கு வகையில் ஈரான் தாக்குதலில் ஈடுபட்டது. வளைகுட நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள், இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும் ஹார்மூஸ் நீரிணையை கடக்க உலக நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்தது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பட்டால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உணவு பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் ஐநா சபை தீடீர் தீர்மானம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. அதில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களையும், சட்டவிரோத சுங்கவரிகள் விதிப்பையும் நிறுத்த வேண்டும். கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் அனைத்து கண்ணிவெடிகளின் இருப்பிடத்தையும் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அந்த தீர்மானம் முன்மொழிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User