இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி,  நாமக்கலில் 2 கோடி முட்டைகள் தேக்கம் : வியாபாரிகள் குமுறல் 

இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு 2 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். 

Mar 04, 2026 - 10:29
0 271
இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி,  நாமக்கலில் 2 கோடி முட்டைகள் தேக்கம் : வியாபாரிகள் குமுறல் 
நாமக்கலில் 2 கோடி முட்டைகள் தேக்கம்

நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே போன்று  சுமார் 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரம்ஜான் நோன்பு, கிறிஸ்தவர்களின் தவக்காலம் போன்ற காரணங்களால் முட்டை நுகர்வு குறையும். அதன்படி தற்போது 20 சதவீதம் வரை பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு குறைந்து உள்ளது. இதன் காரணமாக முட்டை விலை சற்று குறைந்து உள்ளது.

இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி துபாய், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த 3 நாட்களாக முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. 

கடந்த 3 நாட்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் சுமார் 2 கோடியே 40 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூரில் விற்பனைக்கு  போக மீதமுள்ள முட்டைகளை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கும் பணியில் பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பண்ணையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். முட்டை தேக்கம் காரணமாக விலை கடுமையாக சரியும் என தெரிகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User