தஞ்சாவூரில் மழை துாறலுக்கே லீவு கேட்பதா? -கலெக்டர் அதிருப்தி!

வாழ்க்கையில் கல்வி மட்டும் தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து.

Jan 11, 2024 - 00:04
0 175
தஞ்சாவூரில் மழை துாறலுக்கே லீவு கேட்பதா? -கலெக்டர் அதிருப்தி!

தஞ்சாவூரில் தூறல் மழைக்கே பள்ளிகளுக்கு விடுமுறை கேட்பதாக என மாவட்ட ஆட்சியர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கமங்கலம் கிராமத்தில், மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பங்கேற்றார். பின்னர் அவர் பேசியதாவது, ”மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சின்ன தூறல் வந்து விட்டாலோ, காலையிலேயே பல பெற்றோர் எனக்கு போன் செய்து, பள்ளிக்கு லீவு உண்டா?'என,கேட்கின்றனர். மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்.

நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1 முதல் மழை துவங்கி விடும். பல நேரங்களில் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றுள்ளேன். மழைக்கு விடுமுறை என்று நினைத்து நான் வீட்டில் இருந்திருந்தால், உங்கள் முன் கலெக்டராக நின்றிருருக்க மாட்டேன். தயவு செய்து பெற்றோர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வாழ்க்கையில் கல்வி மட்டும் தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து. இவ்வாறு, அவர் பேசினார்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 2
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User