தவிர்க்க முடியாத காரணம்தான் தாமத்திற்கும் காரணம்...கிளியர் விளக்கம் கொடுத்த ஆவின்...

Mar 27, 2024 - 12:35
0 174
தவிர்க்க முடியாத காரணம்தான் தாமத்திற்கும் காரணம்...கிளியர் விளக்கம் கொடுத்த ஆவின்...

சென்னையில் ஆவின் பால் விநியோகம் தாமதமானதற்கு ஆவின் நிர்வாகம் விளமளித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தவிர்க்க முடியாத சில காரணங்களால், சென்னை முழுவதும் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் ஒருசில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு, அனைத்து இடங்களுக்கும் சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் காலதாமதத்திற்கு வருந்துவதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User