ச்சீசீ… தலைமை காவலர் இப்படி பண்ணலாமா ? ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

சேலத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த தலைமை காவலர் மீது துறைரீதியான விசாரணை தொடங்கியுள்ளது. பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Feb 04, 2026 - 12:25
0 199
ச்சீசீ… தலைமை காவலர் இப்படி பண்ணலாமா ? ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை
ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

சேலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக பிங்க் ரோந்து வாகனம் இயக்கப்பட்டு வருகிறது இதில் பெண்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தகவல் வந்தால் இந்த பிங்க் ரோந்து வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் இதில் பெண் போலீசார் இருப்பார்கள் இதன்படி சேலம் மாநகரில் எட்டுக்கும் மேற்பட்ட பிங்க் ரோந்து வாகனம் இயங்கி வருகிறது

சேலம் டவுன் காவல் நிலையத்தில் பிங்க் வாகன டிரைவராக ஏட்டு சக்திவேல் பணியாற்றினார். இவருடன் பெண் காவலர் ஒருவரும் ரோந்து  சென்றார். அப்போது பெண் காவலருக்கு தலைமை காவலர் சக்திவேல், டார்ச்சர் செய்ததாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது .

இதுகுறித்து பெண் காவலர் சேலம் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார் .இதனை விசாரித்த காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமை காவலர் சக்திவேலை சேலம் அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளனர்.

சக்திவேல் மீது துறை விசாரணை செய்யவும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை காவலர் சக்திவேல் ,பெண் காவலர் ஒருவருக்கு டார்ச்சர் கொடுத்ததும், இதனால் அவர் தற்போது அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User