”ரூ.1 லட்சம் அபராதம் ரத்து”  –  மன்சூர் அலிகானுக்கு குஷியோ குஷி..!

திரிஷாவுக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை மட்டும் உறுதி செய்தது.

Feb 29, 2024 - 21:31
0 143
”ரூ.1 லட்சம் அபராதம் ரத்து”  –  மன்சூர் அலிகானுக்கு குஷியோ குஷி..!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

நடிகை திரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார்.ஆனால் அதன் பின்னர் அவரே நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதத்துடன், மனுவை தள்ளுபடி செய்தார். 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வு, மன்சூர் அலிகானுக்கு விதித்த அபராதத் தொகையை ரத்து செய்தது. மேலும் திரிஷாவுக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை மட்டும் உறுதி செய்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User