நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் 

சென்னையில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

Apr 11, 2026 - 11:14
0 350
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் 
வெடிகுண்டு மிரட்டல் 

சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டன் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது.அதில் போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடுகளில் 5 ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இன்று காலை அலுவலக ஊழியர்கள் வெடிகுண்டு மிரட்டலை பார்த்து உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் தெற்கு மண்டல கட்டுபாட்டு அறையில் இருந்தும் உடனே தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் இன்று காலை தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன்  ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் தரப்பில் வேண்டாம் என்று  கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.  விசாரணையில் அது புரளி என தெரிந்தது.  இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User