Ajith: விடாமுயற்சி படப்பிடிப்பில் விபத்து… உயிர் தப்பிய அஜித்… பதற வைக்கும் வீடியோ!

அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Apr 04, 2024 - 19:30
Updated: 2 years ago
0 329
Ajith: விடாமுயற்சி படப்பிடிப்பில் விபத்து… உயிர் தப்பிய அஜித்… பதற வைக்கும் வீடியோ!

சென்னை: அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வருகிறது. இதனால் படம் முழுக்க சண்டைக் காட்சிகளுடன் சில கார் சேஷிங் சீன்களும் இருக்கும் என சொல்லப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது வெளியான சில வீடியோக்கள் ரசிகர்களை பதற வைத்துள்ளது.  

அஜித் ட்ரைவிங் செய்ய அவரது அருகே ஆரவ் உள்ளார். இருவரும் பயணிக்கும் அந்த கார் தறிகெட்டு தாறுமாறாக ஓடி திடீரென சாலையின் ஓரம் தலைகுப்புற கவிழ்கிறது. விபத்து நடந்ததும் “Are u ok… Are u ok..” என ஆரவ்-இடம் அஜித் பதற்றத்துடன் கேட்கும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. கார் கவிழவும் படக்குழுவினர் ஓடிச் சென்று அஜித்தையும் ஆரவ்வையும் பத்திரமாக மீட்கின்றனர். காரில் இருந்த ஏர்பேக் சரியாக வேலை செய்ததால் இருவரும் உயிர் தப்பியதாகத் தெரிகிறது.  

விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது ரியலாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது இப்போது நடந்தது இல்லை என்றும், கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்தது எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோக்களை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டரில் ஷேர் செய்ய, அது இப்போது வைரலாகி வருகிறது.  

கார், பைக் ரேஸரான அஜித், ஏற்கனவே சில படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியுள்ளார். ஆனால் விடாமுயற்சி ஸ்பாட்டில் நடந்த ஆக்ஸிடெண்ட் வீடியோ அஜித் ரசிகர்களை பதற வைத்துள்ளது. படப்பிடிப்பில் இந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்க அஜித்தை தவிர வேறு யாருக்கும் துணிவு கிடையாது என கமெண்ட்ஸில் ஃபயர் விட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User