Aavesham OTT Release: ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான ஆவேசம்… எப்போ எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?

ஃபஹத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆவேசம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 04, 2024 - 21:44
0 662
Aavesham OTT Release: ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான ஆவேசம்… எப்போ எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?

சென்னை: இந்தாண்டு ஆரம்பம் முதலே மலையாளத்தில் வெளியான படங்கள் சக்கைப் போடு போட்டு வருகின்றன. பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் வரிசையில் ஃபஹத் பாசிலின் ஆவேசம் திரைப்படமும் மாஸ் காட்டியது. ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த மாதம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸானது. முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்த ஆவேசம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் 130 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது ஆவேசம். 

ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்து 100 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு கிடைத்தது. ஆக்‌ஷன் ப்ளஸ் டார்க் காமெடி ஜானரில் வெரைட்டியாக ஆவேசம் படத்தை இயக்கியிருந்தார் ஜித்து மாதவன். அதேபோல் ஃபஹத் பாசிலின் லுக்கும் அவரது மிரட்டலான நடிப்பும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமைந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் ஆவேசம் அமர்க்களமான ஹிட் அடித்தது.

தொடர்ந்து 4வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆவேசம், ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. அதன்படி இந்தப் படம் வரும் 9ம் தேதி அல்லது 17ல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளதாம். இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் விரைவில் ஆவேசம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமேசான் ப்ரைம் ஓடிடி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User