Aavesham Box Office: ஃபஹத் பாசிலின் ரியல் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்… ஆவேஷம் வசூல் இத்தனை கோடியா..?

ஃபஹத் பாசில் நடிப்பில் கடந்த 11ம் தேதி ரிலீஸான ஆவேஷம் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் மூலம் முதன்முறையாக 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளார் ஃபஹத் பாசில்.

Apr 24, 2024 - 18:34
0 360
Aavesham Box Office: ஃபஹத் பாசிலின் ரியல் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்… ஆவேஷம் வசூல் இத்தனை கோடியா..?

சென்னை: ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்த ஆவேஷம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ஒருபக்கம் டார்க் காமெடி, ஆக்‌ஷன், மாஸ் மேக்கிங் என கலக்கிய ஆவேஷம், இன்னொரு பக்கம் ஃபஹத் பாசிலின் வெறித்தனமான நடிப்பால் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தது. முதல் பாதியில் காமெடி கேங்ஸ்டராக ஃபன் செய்த ஃபஹத் பாசில், இரண்டாம் பாதியில் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருப்பார். சீன் பை சீன் செம்மையாக வெரைட்டி காட்டி நடித்த ஃபஹத் பாசிலை ரசிகர்கள் கொண்டாடினர். 

இந்நிலையில், ஆவேஷம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தரமான சம்பவம் செய்துள்ளது. அதன்படி இந்தப் படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்து 100 கோடி வசூலித்த முதல் படம் ஆவேஷம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 11ம் தேதி ரிலீஸான ஆவேஷம் படத்துக்கு இந்த வாரமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இந்தப் படம் இன்னும் பல கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் இந்தாண்டு ரிலீஸான பிரேமலு திரைப்பட 100 கோடி ரூபாய் வசூலித்தது. அதனையடுத்து வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் 200 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்திருந்தது. அதேபோல், சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் படம் 150 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை கடந்தது. இந்த வரிசையில் ஃபஹத் பாசிலின் ஆவேஷம் 100 கோடி வசூலில் இணைந்துள்ளது. ஃபஹத் பாசில் கேரியரில் இது தரமான பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என மல்லுவுட் வட்டாரங்கள் பாராட்டி வருகின்றன.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User