96வது ஆஸ்கர் விருதுகள்... லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குவிந்து வரும் நட்சத்திரங்கள்!

2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நாளை காலை நடைபெற உள்ளது.

Mar 10, 2024 - 22:28
0 224
96வது ஆஸ்கர் விருதுகள்... லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குவிந்து வரும் நட்சத்திரங்கள்!

ஆண்டு தோறும் வெளியாகும் ஹாலிவுட் திரைப்பட கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் அகாடமி விருதுகள் என்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2023ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா, நாளை (மார்ச் 11) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற உள்ளது. இதற்காக ஹாலிவுட் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் விழா நடைபெறும் மையத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். 


கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம் மொத்தம் 13 பிரிவுகளிலும் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான புவர் திங்ஸ் என்ற திரைப்படம் 11 பிரிவுகளிலும், மார்டின் ஸ்கார்சஸே இயக்கத்தில், லியானோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான கில்லர்ஸ் ஆன் த பிளவர் மூன் என்ற திரைப்படம் 10 பிரிவுகளிலும் போட்டிக்குத் தேர்வாகியுள்ளன. 

இதில், ஓபன்ஹெய்மர் திரைப்படம் விருதுகளை அள்ளிக்குவிக்கும் என்று இப்போதே பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User