ஆந்திராவில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார்- 5 பேர் உயிரிழந்த சோகம்

படுகாயம் அடைந்த நான்கு பேருக்கு மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Feb 26, 2024 - 12:53
Updated: 2 years ago
0 294
ஆந்திராவில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார்- 5 பேர் உயிரிழந்த சோகம்

ஆந்திராவில் லாரி மீது கார் மோதியதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள பாரளப்பள்ளியில்  சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அங்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தவர்கள் மீது இடித்ததோடு, பெங்களூரில் இருந்து வந்துக்கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள், காரில் இருந்தவர்கள் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

படுகாயம் அடைந்த நான்கு பேருக்கு மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த மதனபள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User