தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்...

தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Mar 16, 2024 - 20:11
0 205
தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்...

தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அது தவறும் பட்சத்தில் வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் 2021 - 2024 ஆம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி  வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம்,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது. 

அதில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 26 பேர் என மொத்தம் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அனைத்து தேர்தல் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User