2027ம் ஆண்டு 20வது  ஐபில் கிரிக்கெட் தொடர்: மார்ச் மாதமே தொடக்கம்  

2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Jun 18, 2026 - 17:12
0 276
2027ம் ஆண்டு 20வது  ஐபில் கிரிக்கெட் தொடர்: மார்ச் மாதமே தொடக்கம்  
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான விவாதங்கள் தற்போது துவங்கிவிட்டது. அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வலுத்து வருகிறது. 2027-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அணிகளின் எண்ணிக்கை  12 ஆகவும், போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. 

இந்தியாவில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களை கோடை வெப்பத்தால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக கோடை காலத்துக்கு முன்பாகவே ஐபிஎல் போட்டிக்களை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. 

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பிசிசிஐ, இந்நிலையில், கோடை வெப்பத்திலிருந்து வீரர்களையும் ரசிகர்களையும் பாதுகாக்கும் வகையில், 2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை முன்னதாக, இரு வாரங்களுக்கு முன் அதாவது மார்ச் 10 அல்லது 15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User