மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி... பொதுக்கூட்டம், ரோட்ஷோ-வில் பங்கேற்கிறார்..!

மார்ச் 15, 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, பாஜக பொதுக்கூட்டம் மற்றும் ரோட்ஷோ-வில் பங்கேற்கிறார்.

Mar 11, 2024 - 21:21
0 206
மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி...   பொதுக்கூட்டம், ரோட்ஷோ-வில் பங்கேற்கிறார்..!

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 16 உத்தேச தேதியாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், பிரசாரம் மேற்கொள்வதற்காகப் பிரதமர் மோடி 5 நாள் பயணமாக தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு செல்கிறார். இதில் மார்ச் 15, 16 மற்றும் 18 ஆகிய 3 நாட்கள் தமிழகத்திற்கு வரவுள்ளார்.

மார்ச் 15 ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து சேலம் வரும் பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதையடுத்து, 16 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு செல்லும் அவர், அங்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.  இதையடுத்து மார்ச் 18 ஆம் தேதி கர்நாடக மாநிலம் குல்பர்காவில் இருந்து கோவை வரும் பிரதமர் மோடி, பாஜகவின் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொள்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User