சைக்கோ தந்தை..பிளேடால் கீறி சித்ரவதை... அலறிய குழந்தை..கதறிய தாய்..

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற மனைவியை ஊருக்கு வர வைக்க, பெற்ற குழந்தையை அடித்து பிளேடால் கீறி சித்ரவதை செய்து வீடியோவாக பதிவு செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Apr 18, 2024 - 14:08
0 454
சைக்கோ தந்தை..பிளேடால் கீறி சித்ரவதை... அலறிய குழந்தை..கதறிய தாய்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதிரம்பட்டிணம் கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.  பாலசுப்ரமணியன் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால் வருமானமின்றி தவித்து வந்த சிவரஞ்சனி குடும்ப சூழல் காரணமாக மலேசியாவில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்து அங்கு சென்றதாக கூறப்படுகிறது.

மனைவி மலேசியா சென்ற நிலையில் வேலைக்கு போகாமலும், குடிக்க பணம் கிடைக்காததாலும் விரக்தியில் இருந்த பாலசுப்ரமணியன் தன்னுடைய மகளின் கைகளை பிளேடால் கிழித்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் துன்புறுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்து சிவரஞ்சனிக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

அந்த வீடியோவில் சிறுமியின் கைகளில் பிளேடால் அறுத்து அம்மாவ கூப்புடு என பாலசுப்ரமணியன் மிரட்டியதும் சிறுமி கதறி அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்கிறது. 

இந்த வீடியோ பார்த்து வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தையை சித்ரவதை செய்வது குறித்து காவல்துறையின் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றதால் அதிரடியாக களத்தில் இறங்கிய அதிராம்பட்டினம் காவல்துறையினர் பாலசுப்ரமணியனை கைது செய்தனர்.

மனைவியை ஊருக்கு வர வைப்பதற்காகவே குழந்தையை துன்புறுத்தியதாக பாலசுப்ரமணியன் வாக்குமூலம் அளித்த நிலையில் குழந்தை துன்புறுத்தியது, வன்கொடுமை என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர். குழந்தையை மீட்ட போலீசார் தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்த நிலையில், மனைவியை வரவைக்க பெற்ற மகளையே ஈவு இரக்கமில்லாமல் துடிக்க துடிக்க சித்ரவதை செய்த சைக்கோ தந்தையின் செயல் அனைவரின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 3
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User