கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக்கொலை... விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்...!  

திருவள்ளூரில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

May 13, 2024 - 00:42
0 479
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக்கொலை... விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்...!  

 கடந்த 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று ஆடைகள் இன்றி, உடலின் பல இடங்களில் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சென்ற பாதிரிவேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து, அப்பெண்ணின் முகம், காது என பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்ததையடுத்து அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து பல்வேறு திடுக்கிம் உண்மைகள் தெரியவந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், டாஸ்மாக்கில் மதுவாங்கிக் கொண்டு ஒதுக்குபுறமாக சென்ற பெண்ணின் பின்னால் 3 இளைஞர்கள் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை அடையாளம் கண்டு காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், மதுபோதையில் இருந்த பெண்ணிடம் சூர்யா என்ற நபர் ஆசை வார்த்தை பேசி பெண்ணின் அனுமதியோடு உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. 

ஆனால், சூர்யாவுடன் சென்ற இரண்டு நண்பர்களும் மதுபோதையில் பெண்ணின் மீது ஆசை கொள்ள, அதற்கு அப்பெண் மறுத்த நிலையில், அவரை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இது வெளியில் தெரியவரக் கூடாது என்பதற்காக அப்பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து சூர்யா, சுவேந்தர், ஜெபக்குமார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User